அவகோடா பழத்தின் நன்மைகள் | Avocado In Tamil | Benefits avocado in Tamil

Benefits avocado in Tamil
Benefits avocado in Tamil

Avocado Fruit Benefits In Tamil

Benefits avocado in Tamil -வணக்கம் இன்றைக்கு அவகோடா பழத்தில் நிறைந்துள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம்.பொதுவாகவே காய்கறிகள்,பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் அவற்றில் நிறைந்திருக்கும் விட்டமின்கள், நார் சத்துக்கள்,கனிமச்சத்துக்கள் போன்றவை இதய நோய்கள் ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அந்த வகையில் நமது உடலுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியதுதான் பட்டர் புரூட் எனப்படும் இப்பழத்தில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து,பொட்டாசியம், மெக்னீசியம்,மாங்கனிசம் சத்து, பாஸ்பரஸ்,விட்டமின் ஏ,விட்டமின் பி காம்ப்ளக்ஸ் வகைகள் வைட்டமின் சி, விட்டமின் இ,விட்டமின் கே போன்ற எண்ணற்ற விட்டமின்களும் மினரல்களும் தாது உப்புகளும் நிறைந்துள்ளன.

Avocado In Tamil -இப்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொண்டால் கிடைக்கும் முக்கியமான 15 நன்மைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

சத்துக்கள் | Avocado In Tamil

அவகோடா பழத்தில் அதிக அளவு நல்ல கொழுப்புகள்,நார்ச்சத்து, பொட்டாசியம்,மெக்னீசியம் போன்றவை நிறைந்து இருப்பதால் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்கவும் பக்கவாதம், இதய நோய்கள் வராமல் தடுக்கவும், இப்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வது சிறந்தது.

அழகு | Avocado In Tamil

பலவிதமான அழகு சாதன பொருட்களில் இப்பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பழம் விட்டமின் சி,விட்டமின் இ நிறைந்துள்ளதால் சரும வளர்ச்சி, சருமத்தில் சுருக்கம் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. சரும செல்களை புதுப்பிக்கவும் வயது முதிர்வு தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.

எலும்பு | Avocado In Tamil

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளும் இந்த அவகோடா பழத்தில் நிறைந்துள்ளன.மூட்டு வலி எலும்பு தேய்மானம் அதிகம் இருப்பவர்கள் இப்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் இப்பழம் பிரச்சனைகளை குறைக்க செய்யும்.

பெண்களுக்கு அவகாடோ | Avocado In Tamil

பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்க இப்பழம் மிகச் சிறந்தது. கருமுட்டை வளர்ச்சி குறைபாடு இருக்கும் பெண்கள் அவகோடா பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் கருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

அதுவும் முதல் மூன்று மாதத்தில் நம்ம அவகோடா எடுக்கும் போது குழந்தைக்கு ரொம்ப முக்கியமான இந்த ரெண்டு நியூட்ரிஷனும் தேவை. குழந்தையோட முழு வளர்ச்சிக்கும் முதல் மூன்று மாதத்திற்கு அதிகமா தேவைப்படுறது.

போலிக் ஆசிட் தான் அதிகமான கால்சியம், பொட்டாசியம்,மேக்னீசியம், காப்பர்,ஜிங்க நியூட்ரிஷன்ஸ் இருப்பத்தால் இது எல்லாமே கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைக்கும் தேவையான ரொம்ப முக்கியமான நியூட்ரிஷன்.

Avocado In Tamil | Benefits avocado in Tamil

நியூட்ரிசன் குழந்தையோட மூளை வளர்ச்சிக்கு ரொம்பவே பயனுள்ளதாகும். அது மட்டும் இல்லாம குழந்தையோட நரம்பு மண்டலத்துக்கு இது ரொம்பவே வளர்ச்சியை இம்ப்யூஸ் பண்றதுக்கு இது அதிகமாய் உபயோகிக்க படுகிறது.குழந்தையோட மூளை வளர்ச்சிக்கு வந்து இந்த அவகோடா பழம் ரொம்ப முக்கியமானது. கர்ப்பகாலத்தில் அதிகமான கால் வலி ஏற்படும்.

இதுல இருக்கும் பொட்டாசியம், கால்சியம் அந்த நிவாரணத்தில் இருந்து எளிமையாய் சரி செய்யும். முதல் மூன்று மாதத்தில் அவகோடா எடுத்துக்கும் போது ஏழு, எட்டு,ஒன்பது மாததுல கால் வலி வராமல் தடுக்கும். குழந்தையோட மூளை வளர்ச்சிக்கும் குழந்தையோட எலும்பு வளர்ச்சிக்கும் இது ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும்.

முதல் மூன்று மாதத்தில் எடுத்துக்கறதுனால குழந்தை குறைபாடுகள் இல்லாமல் பிறக்கிறதுக்கு.இந்த அவகோடா ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும் .

ரத்த அழுத்தத்திற்கு

ரத்த அழுத்தத்திற்கு மிக நல்லது. வாழைப்பழத்தில் உள்ளதை விட அதிக அளவு பொட்டாசியம் இப்பழத்தில் நிறைந்துள்ளது. ரத்த ஓட்டத்தை சீராக்க, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இப்பழம் உதவுகிறது.

கணபார்வை திறன்

கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் விட்டமின் ஏ,விட்டமின் இ போன்ற சத்துக்கள் இப்பழத்தில் நிறைந்துள்ளதால் கண்புரை ஏற்படுதல் கணபார்வை திறன் குறைவு போன்ற பாதிப்புகளை குறைக்க செய்கிறது. கண் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.

சர்க்கரை நோய்

உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன் உடற் சோர்வு அசதியை தடுத்து அதிக ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் அதிகரிக்கச் செய்கிறது.

சத்துக் குறைபாடு

Benefits avocado in Tamil
Benefits avocado in Tamil

அவகோடா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் எளிதாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. சத்துக் குறைபாடு இருப்பவர்கள் இப்ப பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க முடியும்.

ALSO READ : மூக்கிரட்டை கீரை பயன்கள்| Mookirattai keerai benefits in tamil

புற்றுநோய்

புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடென்ட்கள் இப்பழத்தில் நிறைந்துள்ளன. இதை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் காரணிகளை அழித்து எண்ணற்ற புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

Avocado In Tamil | Benefits avocado in Tamil

மூளை

இப்பழத்தில் உள்ள இயற்கையான வேதிப்பண்புகள் அத்யாவசிய அமினோ அமிலங்கள் மூளையில் செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை சாப்பிட்டு வரும்பொழுது மூலைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மூளை தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.

சிறுநீரக நோய்கள்

இப்பழத்தில் உள்ள சத்துக்கள் சிறுநீரக நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.குறிப்பாக சிறுநீரக கற்கள் சிறுநீர் பாதை தொற்று போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

உடல் வளர்ச்சி

உடலில் வளர்ச்சி மாற்றத்தை மேம்படுத்தவும் ஊட்டச்சத்தை அதிகரிக்கவும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் இப்பழத்தை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தலை முடி வளர்ச்சியை அதிகரிப்பதில்

தலை முடி வளர்ச்சியை அதிகரிப்பதில் அவகோடா பலன் முக்கிய பங்கு வைக்கிறது. அவகோடா பழத்தில் உள்ள விட்டமின்கள் இரும்புச் சத்து புரதம் போன்றவை தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது. அவகோடா பழத்தை அரைத்து பசை போல் செய்து ஹார்பேக்காக போட்டு குளித்து வந்தால் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.

செல்கள்

Benefits avocado in Tamil – உடலில் உள்ள செல்கள் சேதம் அடைவதை கட்டுப்படுத்துகிறது. இப்பழம் இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள வைட்டமின் கே,விட்டமின் சி,விட்டமின் இ போன்றவை சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடராக செயல்பட்டு செல்கள் திசுக்களை புதுப்பிக்கவும் மரபணுக்கள் சேதமடைவதை தடுக்கவும் உதவுகிறது. உடலில் என்றும் இளமையாக வைக்க செய்கிறது.

Avocado In Tamil | Benefits avocado in Tamil

இன்னும் பல மடங்கு நன்மைகளை அளிக்கும் இந்த அவகோடா பழத்தை நாம் தவறாமல் எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here